Sunday, May 10, 2009

அம்மா - எனக்காக துடிக்கும் இதயம்

நிஜத்தின் தெய்வம்...
உனது மடிதான் என் சொர்க்கம்....
உனது புன்சிரிப்புதான் என் இலட்சியம்...!!

எப்போ காலம் வரும் ....??
நான் மீண்டும் உன்மடியில் தலை சாய்க்க....?
தேடுகிறேன் அந்த நாளை.....
ஏன் இந்த கொடுமை - எனக்கு மட்டும்
பிரிவின் வேதனை - நிஜத்தில் கொலைதான்..
போதும் இதுவரை நடந்தவை....

தனிமை பேச்சு
தனிமை சிரிப்பு
தனி நடை
தனி உணவு
இப்படி எல்லாமே தனிமை தான்...


கடவுளுக்கு இந்த இரங்கல் கேட்டால்...
வைக்கும் முற்றுப் புள்ளி......

பி . கு :-
அம்மா எப்போதும் நான் உனது மகனாக பிரக வேண்டும்..
ஏன் தெரியுமா...???

உனது கோபம்
உனது கண்டிப்பு
உனது அரவணைப்பு
உனது சமையல்

இவைகளை மீண்டும் ஒருக்கா அனுபவிக்க....

மகன்

Saturday, May 9, 2009

இருந்தும் இல்லாத போது..

நீ இருந்த போது ;
கணம் கூட கணிப்பில்லாது போனது
நீ இல்லாத போது
கணம் கூட கனமாக இருக்கிறது.......!!!

நீ கதைத்த போது
காற்றுகூட இசைந்து கொடுத்து - உன் வார்த்தைகளை கயபடுத்தாமல்,
நீ மௌனமானதும்
என் நாடி கூட துடிப்பிளந்தது சுவாசிக்க காற்றில்லாமல்.....!!!


உன்னை பார்க்கும் போது,
எனது விழி கூட பரதம் ஆடியது
உன்னை பாராமல் இருக்க,
இமை கூட முள் வேலி ஆகிறது மடல்களுக்கு.....!!!

நீ இருந்தபோது
துள்ளி திருந்த பேனாக்கள்
நீ இல்லாதபோது
பேனாவின் குஞ்சுகள் தத்தளிக்கின்றன - அரவணைக்க நீ இல்லாமல்,
நானும் கூடத்தான்....!!!!


நீ இருந்த போது
கனவிலும் நீதான்
இப்போ....
நினைவிலும் நீதானடி.....!!!!

சலனத்திலும் சஞ்சலம் கண்டேன்
அது உன்னால் தானடி கண்ணே
இன்று சலனமே வாழ்வாகி போனது

இப்படிக்கு

என்றும் உன் நினைவுடன்
வாழும் காதலன்

Saturday, April 11, 2009

தமிழா தமிழா ......

"தமிழ் இனி மெல்ல சாகும்......." - சாத்தியமா ?

தமிழா பொங்கி எழு.....
தலைவிதி மாறட்டும்...
தலைகனங்களை இலக்கணங்கள் ஆக்குவோம்
தலைகணங்களை களை பிடுங்குவோம்..
தொடரட்டும் இந்த பனி போர்...
படிமங்கள் துளிர்க்கும் வரை...

Friday, April 10, 2009

ஏக்கம்

யாரது...........!!!!

ஜன்னல் ஓரமாக ஒரு பார்வை - எட்டி பார்த்தேன்
பின்னல் கோலத்தில் ஒரு பாவை - ஆனால் அது

கானல் கோவை..

ஏமாற்றம்....
தொடரும் இந்த பதிவு....

Thursday, April 9, 2009

கவியரங்கம்

வினா:-

என்னை நீ கண்டதுமில்லை
உன்னை நான் கண்டதுமில்லை
பின் எதற்காக
நான் வாழ
நீ துடிக்கின்றாய்
இதயமே?


விடை:-

கடவுள் காணாத
பக்தன்
கருவைக் காணாத
அன்னை
மலர்கள் காணாத
வேர்கள்

இவை போல
உன்னைக் காணாத
நானும
துடிக்கிறேன் - உன் அன்பிற்காக


மீண்டும் உன்னைச்
சந்திக்கும் போது
கண்கள் கலங்கும் பாசத்துடன்
பிரிகிறேன் - இன்று
உன்னைப் பிரிய மறுக்கும்
மனதுடன்.


இது நட்பின் ஒரு இலக்கணம்
எனது சுவடுகளின் ஒரு அடையாளம்

சில திருட்டுக்கள்......

அன்னை மண், அன்பான சொந்தங்கள்
உயிருள்ள வரை தொடரும் நட்புகள்
காலத்தால் அழியாத கனவுகள்
கண்டவுடன் கண் கலங்கும் பாசங்கள்
என்றும் பிரியாத பிரியங்கள்
அனைத்திற்கும் உன் மனதின்
ஓரத்திலாவது ஓர் இடம் கொடு...
சற்று நேரத்தில்
சருகாகி விடும் என்பது கூட
தெரியாமல்

பூவைப் பார்த்து
புன்னகை புரியும்

இவள் தான்அன்று உன்
அன்பைப் பார்த்து
பிரமித்த
நானா?



கடற்கரை மணலில்
பதித்த கால் தடங்களாய்
அடையாளங்களே அற்றுப் போன
உன் வார்த்தைகள்..
ஏழேழு ஜென்மங்கள் தொடர்ந்திட
நினைத்த சொந்தம்
நான்கு நாட்களில் பாதை மாறிய
பரிதாபம்..
ஆலயமாய் ஆரம்பித்து
அன்புகூட காலாவதியாகி விட
கல்லறையாய் முற்றுப் பெற்ற
பாசத்தின் சோகம்..
அனைத்தையும் என்றும் போல்
உதட்டின் புன்னகையால்
மறைத்திடும் முயற்சியில்
புன்னகைத்த படியே வாழ்த்தும்
இவள்..
என் கவியின் முதல் வரியாய்
உன் பெரை வைத்தேன்
நம் வாழ்க்கையின் கவி வரியாய்
நம் நட்பை வைத்தேன்
பேசிடும் ஓவியமாய்ப்
பெண்ணே உனை வைத்தேன்
சிந்திடும் உன் சிரிப்பை சிதறாமல்
சிறை வைத்தேன்
கண்ணுக்குள் கரு விழியாயக் கண்மணி
உனை வைத்தேன்.
காலமெல்லாம் நீ வாழ வாழ்த்திடும்
என் உள்ளம் அதை
உனக்காய் வைத்தேன்.
வாழ்க்கை எனும் கிண்ணத்தில்
நம்பிக்கையை ஊற்றி வை
மரணத்தின் விளிம்பு கூட
வாழ்க்கையின் மையமாகும்.
தொலை தூர பயணங்கள்
முகம் தெரியா முகவரிகள்
தொடர் கதையாகும் -
தொடரும் நம் வாழ்வில்
கலையாத கனவுகள்
நனவாகும் நாள் வரை
தளராத தன்னம்பிக்கையோடு
துணிவோடு நடைபோடு.. சூரியனை வட்டமிடத் துடிக்கும்
விட்டில் பூச்சியாய் நான்
எனை முதுகில் தூக்கிப் பறக்கத் துடிக்கும்
பீனிஃக்ஸ் பறவையாய் நீ..


திருடன்

Wednesday, April 8, 2009

About Me

I'm Kumaraguru Niroshan, 25 years. Currently working as BSS Engineer in Hutchison Telecommunications Lanka (Pvt) Ltd. I just completed my BSc degree and looking for further improve my knowledge in Telecommunication industry.

During my leisure time I'm always watching films and surfing around the internet. I'm self motivated and hard working person, and eager to be an innovative Engineer.


When I was 19 years, I learned HTML by myself. So as the results I created a web page, but I couldn't able to upload it.. I don't know why....so afterwards I dropped that idea to do it, because my field was swithed to Telecommunication even though I update myself reagrding this area... But any how now I'm going to upload my first page into the internet.... I'm SOOooooo Happy about that......